முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கின்றமையை அரசில் உள்ள சிலர்
விரும்புவதாக இல்லை. எமது உயர் பீடம் கூடும் போதெல்லாம் அவ்வாறானவர்கள்
'மு.கா. அரசிலிருந்து வெளியேர போகிறது' என்ற செய்தியை பரப்பி விடுகின்றனர்.
இப்படியே எமது கட்சியை ஜோக்கர் கட்சியாக சித்திரிக்க முயற்சிகின்றனர் என
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான
ஹாபிஸ் நஷீர் அஹமட் விடிவௌ்ளிக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மு.கா அரசுடன் இருக்கின்றமையானது சிலரின் அரசியலுக்கு பெரும் சவாலாக
இருக்கின்றது. இதனால் அவர்கள் மு.காவை அரசிலிருந்து வெளியேற்ற
முயற்சிக்கின்றனர்
அப்படி எம்மால் எதேச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நாம்
தற்போதைய அரசியல் நிலைமைகளையும் நாட்டின் நிலைமைகளையும் கருத்திற்கொண்டே
திர்மானங்களை எடுக்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பை போன்று நாம் வடக்கு
கிழக்கில் மட்டும் அரசியல் நடத்துபவர்கள் அல்லர். எனவே நாம் தெற்கில் உள்ள
முஸ்லிம்கள் தொடர்பிலும் சிந்தித்தே முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது
என்றார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபையில் மு. கா புறந்தள்ளப்படுகின்றமையை அனுமதிக்க
முடியாது. அவ்வாறு தொடர்ந்து புறந்தள்ளப்படும் பட்சத்தில் நாம் தீர்க்கமான
முடிவுகளை எடுக்க நேரிடும்.
கிழக்கு மாகாண சபையை பொறுத்தவரை ஏனைய மாகாண சபைகளிலிருந்து
வித்தியாசமானது. ஏனெனில், கிழக்கு மாகாண சபை உருவாக்கப்படும் வரை இங்கு
ஆளுநரின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த நிலைமையில் இருந்து
இன்னும் மீளவில்லை. எனவே, நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு
வருகின்றோம்.
நாம் முதலமைச்சரை குறை சொல்லிக்கொண்டு அரசிய நடத்த முடியாது. அத்தோடு
அவருடன் முரண்பட்டுக்கொண்டு சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க
விரும்பவில்லை. முஸ்லிம் முதலமைச்சர் என்ற வகையில் நாம் ஒத்துழைத்தே
செயற்படுகிறோம் என ஹாபிஸ் நஷீர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment