பொதுமக்களின் அழுத்தங்களின் காரணமாகவே அரசாங்கம், தமிழ் முஸ்லிம் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை விடுதலை செய்துள்ளதாக எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று வரையில் பயங்கரவாதி ஒருவரைப் போன்று நடத்தப்பட்ட அசாத் சாலி, மக்கள்
அழுத்தம் காரணமாக இன்று விடுதலை செய்யப்பட்டார் என ரணில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தரப்பினருக்கு எதிராக பயங்கரவாதத்
தடைச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின்
இந்த அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கு சகல தரப்பினரும் இணைந்து செயற்பட
வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment