ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற
தெரிவுக் குழு விரைவில் இறுதி அறிக்கையொன்றை அமைச்சரவைக்கு
சமர்ப்பிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி விடிவௌ்ளிக்கு
தெரிவித்தார்.
அமைச்சரவைக்கு அறிக்கை சமர்பிப்பதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் ரட்னசிறி
விக்ரமநாயக்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக் குழு கூடி விடயம் தொடர்பில்
கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அறிக்கையின் உள்ளடக்கும் விடயங்கள் தொடர்பில் எதுவும் கூற முடியாதுள்ளதாகவும் அமைச்சர் பௌஸி சுட்டிக்காட்டினார்.
Post a Comment