Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கல்முனை மேயராக மீராசாஹிப் தொடரவேண்டும் - சங்கரத்ன தேரர் ஹக்கீமுக்கு கடிதம்

Wednesday, May 80 comments



கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்தும் சிராஸ் மீராசாஹிபே இருக்க வேண்டும் என கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
நான் கல்முனை விகாரைக்கு பொறுப்பாளராக வந்து ஏறக்குறைய பத்தாண்டுகளாகின்றன. கல்முனையில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக இருந்த போதிலும் நான் இங்கு பெரும் பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம், தமிழ் மக்களுடன் மிகவும் அன்னியொன்னியமாக வாழ்ந்து வருகின்றேன். எனக்கு ஏராளமான தமிழ், முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். நான் கல்முனைக்கு வந்ததன் காரணமாக தமிழ் மொழியை நன்கு கற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு மொழிப்பிரச்சினை இல்லாததால் அனைவருடனும் சரளமாக பழகுகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் கல்முனை மிகமுக்கியமானதொரு நகரமாகும். இங்கு நான்கு சமயத்தை சேர்ந்த மூவின மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இங்கு வாழும் மக்களுக்குள் இன, மத. சமய பேதங்கள் இல்லை. அவ்வாறான பிரிவினைகள் ஏற்பட்டாலும் சமயத்தலைவர்கள் ஒன்றித்து சகஜ நிலையை உருவாக்கும் பக்குவம் எம்மிடம் உள்ளது. ஒரு சிலரால் நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன அது இந்த நாட்டில் அமைதியை விரும்பாத சிலரது செயற்பாடாகும் ஒரு மத தலைவன் என்ற அடிப்படையில் அவ்வாறான சம்பவங்களை நான் கண்டிக்கின்றேன். என அந்த கடிதத்தில் ரண்முத்துகல சங்கரத்ன தேரரினால் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது கல்முனை மாநகர சபையின் முதல்வராக வேறு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது உங்கள் கட்சி நடவடிக்கையாக இருந்தாலும்  தொடர்ந்தும் தற்போதய முதல்வர் சிராஸை கல்முனையின் முதல்வராக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். கல்முனையில் பல அரசியல் பிரமுகர்களை கண்டிருக்கின்றேன். சொல்வதை செய்யமாட்டார்கள் செய்வதை சொல்லமாட்டார்கள் நான் பல தடைவ பல பிரச்சினைகளுடன் தற்போதய முதல்வர் சிராஸை நெருங்கி இருக்கின்றேன் அத்தனைக்கும் தீர்வு வழங்கி இருக்கின்றார். இவரிடத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடில்லை அனைவரையும் சமமாக மதித்து சேவை செய்கின்றார். காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்திலிருந்து மக்களுக்காக அற்பணிப்புடன் சேவை புரிகின்றார். கடந்த காலங்களை விடவும் மாநகர சபையின் சேவை மக்களை இலகுவாக சென்றடைகின்றது. பல அபிவிருத்தி திட்டங்கள் கல்முனை தமிழ் முஸ்லிம் பகுதிகளில் முன்னெடுக்கப் படுகின்றன. பிரச்சினை எதுவும் முறையிடப்பட்டால் உரிய இடத்துக்கு நேரடியாக சென்று தீர்வு பெற்றுக் கொடுக்கின்றார். கடந்த வெள்ள அனர்தத்தின் போது இதனை நேரடியாக எம்மால் அவதானிக்க முடிந்தது. பண பலம் , மொழிபலம் கொண்ட கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகர சபையை ஆளும் வல்லமையைக் கொண்டவர். 
எனவே அவரையே தொடர்ந்தும் நான்கு வருடங்களுக்கும் கல்முனை மாநகர சபையின் முதல்வராக செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு  எழுதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by