Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று!

Friday, May 310 comments

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று! 
வயது, பாலின வித்தியாசமின்றி புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. பள்ளிப் பருவ மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31ம் திகதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்´ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து.

"புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே´ இத்தினத்தின் நோக்கம்.

புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

எத்தனை நச்சு: மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்´. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை.

அருகில் இருப்பவரையும் உலகளவில் 6 விநாடிக்கு ஒருவரும்; ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர்.

2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால், அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நோ´ சொல்லுங்கள்: நன்மை அதிகம்புகை பழக்கத்துக்கு அடிமையாகி, உயிரை விடுவதை விட, புகையிலை பழக்கத்தை விடுவதே சிறந்தது. படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும்.

புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு, சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

இதைவிட புகையிலை பழக்கத்தை கைவிட வேறு காரணங்கள் வேண்டுமா. 

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by