(Ad) அசாத் சாலி உயிரிழந்தால் அதற்கான பொறுப்பை ராஜபக்ஷ அரசாங்கமே ஏற்றுக்
கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ
அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அசாத் சாலி தெரிவித்த அரச விரோத கருத்து என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, ராஜகிரியவில் இன்று (07-5-2013) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு
மேலும் தெரிவிக்கையில்,
அசாத் சாலி தொடர்பில் செய்தி வெளியிட கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டிருந்தால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் அவரை கைது
செய்ய வேண்டும்.
அசாத் சாலியின் கைது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது. அசாத் சாலியின் கைது கைது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
ராஜூவ் காந்தி கொலை சந்தேகநபர் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு
சந்தேகநபரான கேபி அரசின் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்.
தீவிரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்து தம்வசம் வைத்துள்ளது. என
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment