முஸ்லிம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் அசாத் சாலியை விடுதலை செய்வதற்காக சர்வதேச மன்னிப்புச் சபை இணைய
கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட
வேண்டும் அல்லது அவரை விடுதலை செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் இணையத்தின் ஊடாக இந்த மகஜரில்
கையெழுத்துக்களை திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அசாத் சாலிக்கு தேவையான மருத்துவ வசதிகளை
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும்
சட்டத்ரதரணிகளை சந்திக்க மனிதாபிமான அடிப்படையில் அனுமதியளிக்க
வேண்டுமேனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வேதேச சட்டங்களுக்கு கைது
செய்யப்பட்டவர் எதற்காக கைதுசெய்யப்பட்டார் என்ற விளக்கம் அளிக்கப்பட
வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment