ஆஸாத் சாலியின் விடுதலை துரிதப்படுத்தப்ட வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தியுள்ள ஆஸாத் சாலியின் குடும்பம், ஆஸாத் சாலியின் மகள் பௌத்த
விகாரைக்கு மலர் தட்டு கொண்டு போனரைம தொடர்பில் விரைவில் உரிய விளக்கம்
வழங்கப்படுமென அறிவித்துள்ளது.
இந்த நெருக்கடிமிக்க நேரத்தில் தமது இயக்க இலாபங்களுக்காக அல்லது அரசியல்
நிகழ்ச்சி நிலுக்காக ஆஜாத் சாலியையையோ அல்லது அவரது குடும்ப
அங்கத்தவர்களையோ விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல எனவும் ஆஸாத் சாலிக்கு
நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
பேஸ்புக் மற்றும் சில முஸ்லிம் சார்பு இணையங்களில் ஆஸாத் சாலி மற்றும்
அவரது குடும்பம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது அவரது விடுதலையை
விரும்பாத சக்திகளுக்கு ஊக்கத்தை கொடுக்குமெனவும் ஆஸாத் சாலியின்
குடும்பத்தினர் சார்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
அறியப்படுத்தப்பட்டது.
அதேவேளை ஆஸாத் சாலியின் விடுதலையை துரிதப்படுத்தும் வகையில் திட்டமிட்டபடி
நாளை வியாழக்கிழமை நாடு பூராகவும் துஆ பிரார்த்தனை நடைபெறுமெனவும் அந்த
வட்டாரங்கள் கூறின.
மேலும் ஆஸாத் சாலியை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக்கூறி
தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில்
எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment