Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இரட்டை படுகொலை – சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Wednesday, May 80 comments

அண்மையில் செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேரும் இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை நீதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்ததுடன் இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி, பொல்லுகள், தடிகள் உள்ளிட்ட பொருட்களை இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் வைத்து கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட செங்கலடிப் பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.
செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்களான ரகு தக்ஷனா அவரது காதலன் சிவனேசராஜா அஜந், அவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன், குமாரசிங்கம் நிலக்ஷன் ஆகிய நான்கு சந்தேக நபர்களும் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கினை விசாரணை செய்த நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையைப் பார்வையிட நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by