தமிழ்,முஸ்லிம் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து வரும் அசாத் சாலிக்கு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி, பொதுபல சேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். மறுபுறத்தில் தமிழ்,முஸ்லிம் ஒற்றுமைக்கு தன்னாலான முயற்சிகளையும் எடுத்து வருகின்றார். மேலும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிறுபான்மை விரோதப் போக்குகளையும் துணிச்சலுடன் எதிர்த்து வருகின்றார். இந்நிலையில் அசாத் சாலியின் நடவடிக்கைகள் இனவாத கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதாக கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவோ, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையே அளுத்கமை வன்முறைகளுக்கு ஞானசார தேரரின் இனவாத உரைதான் அடிப்படையாக அமைந்திருந்ததாக ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டியதற்கு, அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக பொலிஸ் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். ஞானசார தேரர் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று கூறினாரே தவிர, அவர் தாக்குதலில் பங்கெடுக்கவில்லை என்றும், அதன் காரணமாக அவருக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Homeஅசாத் சாலிக்கு நீதிமன்ற தடையுத்தரவு! பொதுபல சேனாவுக்கு அரச ஆதரவு
அசாத் சாலிக்கு நீதிமன்ற தடையுத்தரவு! பொதுபல சேனாவுக்கு அரச ஆதரவு
Sunday, June 220 comments

Post a Comment