ஜனாதிபதின் பணிப்பில் அமைச்சர் பௌசி
ஜெனிவா மனித உரிமைகள் அவையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை
அரசாங்கத்துக்கு திரட்ட போனபோது முஸ்லிம் நாடுகளில் இலங்கையில்
மஸ்ஜித்துக்கள் தாக்கபடுவதாக அமைச்சர்
ஹக்கீமின் அறிக்கையை அந்த நாடுகள் காட்டுகிறதாம் என்று அமைச்சர் விமல்
வீரவன்சாவின் கட்சியான தேசிய சுதந்தர முன்ணி குற்றம் சாட்டியுள்ளது .
அக் கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ள
தாவலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜெனிவாவில் மட்டுமல்ல தமது அறிக்கையை
குவைத் மற்றும் சவூதி அரேபியாவுக்கும் அனுப்பியிருக்கிறார் இவ் இரு
நாடுகளும் கூட ஜெனிவா மனித உரிமை மாநட்டில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பது
சந்தேகமே. என தெரிவித்துள்ளதுமேலும் ஒரு பக்கமும் ஜனாதிபதி அவர்கள்
அமைச்சர் பௌசியை அரபு நாடுகளின் ஆதரவைத் வேண்டி அங்கு அனுப்பும்போது அங்கு
முஸ்லிம் காங்கிரஸ்த் தலைவர் அனுப்பிய அறிக்கையில் இலங்கையில் முஸ்லிம்களது
பள்ளிவாசல்கள் தாக்கிய தகவல்களை அவர்கள் காண்பிக்கின்றனராம்.என விமல்
வீரவன்சாவின் தேசிய சுதந்தர முன்ணியின் பேச்சாளர் முஹமட் முஸம்மில் விசனம்
தெரிவித்துள்ளார்.
Post a Comment