HRC25/1 “Promoting reconciliation,
accountability, and human rights in Sri Lanka” எனும் தலைப்பில்
இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணையைக் கோரும் பிரேரணையை அமெரிக்கா, ஐக்கிய
இராச்சியம் மற்றும் வட அயர்லாந்து, மொரிஷியஸ் ஆகிய நாடுகள் இணைந்து முன்
வைத்துள்ளன.
யுத்த நிறைவின் பின்னரான இலங்கையில்
ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தி மற்றும் வட மாகாண தேர்தல் உட்பட நல்லிணக்க
நடவடிக்கைகளை சர்வதேசம் வரவேற்கும் அதேவேளை, இலங்கையில் நீதித்துறை உட்பட
சமூக நல்லுறவு மற்றும் மனினத உரிமைகள் விவாகாரங்களில் நம்பகரமான
செயற்திட்டங்களை உருவாக்கும் வகையில் சர்வதேச தலையீடு அவசியமாவதாகவும்,
அதனடிப்படையில் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்கு சார்பாக இப்பிரேரணை
முன்வைக்கப்படுவதோடு இலங்கையில் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் மீதான
தாக்குதல்களும் சுதந்திரமான முறையில் விசாரணை செய்யப்பட்டு
குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Post a Comment