
வட மாகாண சபை முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்கு வரும்படி ஜனாதிபதி மஹிந்த அழைப்பு விடுத்தபோது முடியாது என்று கூறிய மன்மோகன் சிங், வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று வருவாராயின் அதனை ஐதேக எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டார்.
வரவு - செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பின் குழுநிலை விவாதத்தை இன்று (02) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய பிரதமர் இலங்கை வந்து வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய பிரதமரின் விஜயம் இலங்கை - இந்திய நட்புறவை சீர்குலைக்கும் சதியாக அமையக்கூடும் என ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
Post a Comment