
அன்மைக்காலமாக ஊடகங்களிள் முஸ்லிம் காங்ரஸிற்கு வயது 27 என எழுதப்பட்டும் எடுத்துரைக்கப்பட்டும் வருவதனால் இது தொடர்பான ஒரு சிறிய விளக்கத்தை அக்கட்சியின் ஸ்தாபகப் பொதுச்செயலாளரும் மஜ்லிஸ் சூராவின் பிரதித் தலைவரும் அரசியல் உச்சபீட மூத்த உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரனி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெளிவுபடுத்துவதாவது.
முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியில் அதன் முன்னாள் பட்டின சபை தலைவர் ஏ. அகமது லெவ்வை அவர்களின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் அங்குரார்ப்பனக் கூட்டத்தில் இதனை 21.09.1980ம் ஆண்டு ஆரம்பித்தோம்; அப்பொழுது கிழக்கிலங்கை முழுவதும் நிலவிய அசாதாரன சூழ்நிலையின் காரணமாக அதன் அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்தி வந்த வேளையில் தான் இதனை அகில இலங்கை பூராகவும் விரிவுபடுத்தி அக்கட்சியை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவதற்கான தேர்தல் சட்ட வரம்புகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டி தலைநகருக்கு வந்து கொழும்பு பாஷா விலாவில் 29.11.1986ம் ஆண்டு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தினோம்.
இதுதான் உண்மையான வரலாறு இதற்கான எல்லா ஆதாரங்களும் விளக்கங்களும் ஏற்கனவே அவ்வப்போது பல்வேறு ஊடகங்களில் மட்டுமல்ல தொலைக்காட்சிகளிலும் தோன்றி என்னால் எழுதியும் எடுத்துரைக்கப்பட்டும் வந்துள்ளது என்பதை இங்கு நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன். அதுமட்டுமன்றி முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள் உட்பட ஏனைய பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களால் அவர்களின் பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும், பிரசுரங்களிலும், கட்டுரைகளிலும் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் 1980ம் ஆண்டு என பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டுள்ளது.
இதற்கான சகல விதமான அத்தனை ஆரம்பகால ஆவணங்களும் பத்திரிகை செய்தித் துணிக்கைகளும் புகைப்படங்களும் என்னிடம்தான் உண்டு என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு குழந்தை பிறந்த வருடத்திலிருந்துதான் அதன் வயது கணிக்கப்படுவதுபோல மு.கா.வின் முதல்தோற்றமும் அதன் அங்குரார்ப்பன ஆரம்பித்த ஆண்டிலிருந்துதான் இக்கட்சிக்கு இன்று வயது 33 என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பமும் தோற்றமும் அரசியல் கட்சியாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துகளுக்கும் இங்கு இடமில்லை. ஏனென்றால் மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுடன் அதன் ஆரம்ப முதலாவது பொதுச் செயலாளர் என்ற வகையில் அல்லும் பகலும் பாடுபட்டு நானும் சேர்ந்துதான் இக்கட்சியை தேர்தல் ஆணையாளரிடம் எடுத்துச்சென்று அதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் தயார்படுத்தி முன்னின்று முயற்சி செய்து இன்நாட்டின் முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்குரலாக பதிவுசெய்தோம் என்ற பழைய வரலாறுகளும் சரித்திர சம்பவங்களும் இன்றுள்ள இவர்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லைதான்.
அதன்பிரகாரம் முஸ்லீம் காங்கிரஸ் தேர்தல் ஆணையாளரினால் 1988ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இன்நாட்டில் பதிவுசெய்யப்பட்டது. இதற்காக நாம் பட்ட கஸ்ட நஸ்டங்கள் கொஞ்சம் நெஞ்சமல்ல - இது சத்தியம்.
ஒரு சிலர் குருடர்கள் யானையைப் பார்த்த கதையாக முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய பழைய சம்பவங்களுக்கு புதிய விளக்கங்களும் வியாக்கியானமும் கொடுக்க முனைவது முற்றிலும் வெறும் விந்தையாகவும், வேதனையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது ஏனென்றால் வரலாறுகளும் சரித்திர சம்பவங்களும் ஒருபோதும் முன்னுக்கு பின் முரனாக முடியாது. என மிக அளுத்தம் திருத்தமாக இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.
கடந்த 33 ஆண்டுகளாக தெடர்ந்து இன்றுவரைக்கும் கட்சி மாறாமல் இப்பொழுது இருக்கும் மு.கா.வின் ஒரே ஒரு மூத்த முதல் உறுப்பினராவேன் என்பதனால் இவைகளை ஊருக்கும் உலகுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எழுதிவைப்பது எனது தார்மீக கடமையும் உரிமையுமாகும் என என்னுகிறேன். முதிர்ச்சியான முஸ்லிம் காங்கிரஸின் அனுபவமும் ஆளுமையும் அதன் அரசியல் பலமும் பக்குவமும் வயதையும் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காவே இங்கு இதனை எவ்வித சந்தேகத்திற்கும் அப்பால் நின்று தெளிவுபடுத்திவைக்க விரும்புகிறேன்.
Post a Comment