|
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் ஊழியர்கள் தொடர்பாக முறைப்பாடுகள்
செய்வதாயிருந்தால் இனி கொழும்பு வரத்தேவையில்லை. அந்தந்த மாவட்டங்களில்
அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலுள்ள அலுவலகங்களிலேயே
முறைப்பாடு செய்யலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும்
நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (25) பாராளுமன்றத்தில் வைத்து ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற
உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- முறைப்பாடு செய்யப்பட்டு 50
விநாடிகளுக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பதிவு செய்யப்பட்ட
முகவருடன் தொடர்பு கொண்டு பிரச்சினை குறித்து அறிவிக்கும். 48
மணிநேரத்துக்குள் பிரச்சினைகள் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
பணியாளர்கள் வீடுகளிலிருந்து தப்பிச் சென்றிருப்பார்களாயிருந்தால்
அவர்களது பிரச்சினை தொடர்பாக ரியாத்- ஜித்தா ஆகிய பிரதேசங்களிலுள்ள
அலுவலகங்கள் 24 நேரமும் செயற்படும். அதேபோல் நடமாடும் சேவைகளும்
ஒழுங்குபடுத்தபட்டுள்ளன.
சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு கடந்த ஜுலை மாதம் பொது மன்னிப்பு
வழங்கப்பட்டது. அப்போது 16000 பேருக்கு வீசா கிடைத்து நாடு திரும்பினர்.
மேலும் தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த 5500 பேர் பொது மன்னிப்புக் காலத்தில் தம்மை
சட்டரீதியாக பதிவு செய்துகொண்டுள்ளனர். மேலும் ஒரு பெண் வெளிநாடு செல்வதாக
இருந்தால் அவரது குடும்பப் பின்னணி பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது அவசியம்.
இதற்கெதிராக பதிவு செய்யப்பட்ட முகவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றாலும்
அங்கும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெண்கள் வெளிநாடு செல்வது ஐம்பது வீதத்திலிருந்த 37 வீதமாக குறைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். (News.lk)
| ||||||||
Homeவெளிநாட்டு பணியாளர்கள் குறித்து மாவட்ட பணியகங்களில் முறையிடலாம்: டிலான்
Post a Comment