நிந்தவூரில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து இன்றைய கர்த்தால்
எதிர்ப்பு விடயம் தொடர்பான பேச்சு வார்த்தையொன்று சம்மாந்துறை பொலிஸில்
இடம் பெற்றது.இம்முடிவினை அறிவிக்கும் கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில்
கைகலப்பு ஏற்பட்டுள்ளதுடன் முடிவை ஆட்சேபித்து மீண்டும் டயர் எரிப்பும்
சாலைமறியலும் இடம்பெற்று வருகிறது.
சம்மாந்துறை பொலிஸில் நடைபெற்ற உயர்மட்ட ஒன்று கூடலின் தீர்மானங்களுக்கமைய
நடந்து கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் நிந்தவூர் ஜீம்ஆ பள்ளியில்
இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் விளக்கமளிக்க
முற்படும் போதே கூக்குரலும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து கலைந்த இளைஞர் குழுவினர்
நிந்தவுர்--காரைதீவு எல்லையில் டயர்களை எரித்து சாலைமறியல் போராட்டத்தில்
ஈடுபட்ட வண்ணமுள்ளனர்.
கல்முனை --அக்கரைப்பற்றுக்கான பிரதான வழிப் போக்குவரத்து இச்செய்தி பதிவிடும் நேரம் வரை(10.46pm) சீர்செய்யப்படவில்லை.
காரைதீவு சுற்றுவளைவில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பயணிகளை அவ்வழியால் செல்ல விடாது பொலிஸார் தடுக்கின்றனர்.
Post a Comment