|
||||||||
![]()
2013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் பேஸ் புக்
தொடர்பில் 1,100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர
பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் பேஸ்புக் சமூக வலைத்தளம்
சம்பந்தமானது என ஒன்றியத்தின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.
அவற்றில் போலி பேஸ்புக் கணக்கு மற்றும் பேஸ் புக் கணக்குகளில்
அனுமதியின்றி பிரவேசித்தமை தொடர்பான முறைப்பாடுகள் அடக்கும்.
முறைப்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை
இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
பிறரின் பேஸ் புக் வலைத்தள கணக்குகளுக்கு செல்லும் சைபர் குற்றவாளிகள்,
அதன் மூலம் தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.
|
Home2013 இல் மாத்திரம் இணையம், பேஸ் புக் தொடர்பில் 1100 முறைப்பாடுகள்
Post a Comment