“கட்சியை காட்டிக் கொடுக்கும்
பட்டியலில் நீயுமா?” என்ற தலைப்பில் 26.10.2013 என்ற திகதியிடப்பட்டு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழு என்ற முகவரியில்
வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்திற்கும் சாய்ந்தமருது மத்திய
குழுவிற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எதுவித சம்பந்தமோ, தொடர்போ கிடையாது
என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவரும்,
சி.ல.மு.க அமைப்பாளரும், மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ்
உறுதியாக தெரிவித்தார்.
ஒரு முகவரி அற்றவர் எமது மத்திய குழுவின் பெயரை பாவித்து தங்களுடைய
இலக்குகளை அடைய முற்படுகின்றனர் என்பதை சாய்ந்தமருது மக்களுக்கும்,
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் அறியத்தருகின்றேன்.
Post a Comment