Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சூடு பிடிக்கும் கல்முனை மேயர் பதவி விவகாரம்!

Monday, October 280 comments

கல்முனை மேயர் பதவி விவகாரம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில் மேயர் சிராஸ் மீராசாஹிப் பதவி விலகுவாரா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எழுந்துள்ளது.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்கென இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியை தன் வசமாக்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஐ. ம. சு. முன்னணி 3 ஆசனங்களையும் ஐ. தே. க. ஒரு ஆசனத்தையும் இத்தேர்தலில் பெற்றுக் கொண்டன.


ஆட்சியைத் தனதாக்கிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸில் அப்போது மேயர் தெரிவில் சில சர்ச்சைகள் எழுந்தன. வீதி மறியல் போராட்டங்கள் கடையடைப்பு போன்ற சம்பவங்களும் அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்றன.


தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் அதிகூடிய வாக்குகளைப் (16, 457) பெற்ற சிராஸ் மீராசாஹிப் மேயராக தெரிவு செய்யப்பட வேண்டுமென்று ஒரு சாராரும் அதற்கடுத்த வாக்குகளைப் (13, 948) பெற்ற சட்டத்தரணி நிசாம் காரியப்பரே தெரிவு செய்யப்பட வேண்டுமென்று இன்னுமொரு சாராரும் அழுத்தங்கள் கொடுத்ததனால் கட்சித் தலைமை இவ்விருவரும் தலா இரண்டு வருடங்கள் பதவி வகிப்பர் என முடிவெடுத்தது.


கல்முனை மேயராக சிராஸ் மீரா சாஹிப் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்புப் பின்னர் வெளியாகி இருந்தது. எனினும் கனவான் ஒப்பந் தத்தின் படி சிராஸ் மீரா சாஹிப் இரண்டு வருடங்களுக்கும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இரண்டு வருடங் களுக்கும் பதவி வகிப்பர் என கட்சித் தலைமை அறிவித்தது.


மேயர் சிராஸின் பதவிக் காலம் இரண்டு வருடம் இப்போது முடி வடைந்த நிலையில் சிராஸ் மீரா சாஹிப் பதவி விலக வேண்டுமென கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அழுத்தமான தொனியில் தெரிவித் துள்ளார். மேயர் சிராஸ¤க்கும் கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப் பின் போது இது வலியுறுத்தப்பட்டு பதவி விலகலுக்கான காலக்கெடுவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தலைவர் ரவூப் ஹக்கீ முக்கும் மு. கா. கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பிலும் சிராஸ் பதவி விலக வேண்டுமென்பதில் தலைவர் ஹக்கீம், தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார். எனினும் மாநகர சபை உறுப்பினர்களான எம். ஐ. எம். பிர்தெளஸ், நிசார்தீன் ஆகியோர் தலைவரின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தி மேயர் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கான நியாயங்களையும் சுட்டிக்காட்டினர்.


இந்தக் கூட்டத்தில் பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எம்.பிக்களான பைசல் காசிம், எம். எஸ். தெளபீக் ஆகியோர் பங்கேற்றபோதும் பாராளுமன்றத்தில் இருந்த கல்முனை தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஹரீஸ் எம்.பி. பங்குபற்றாமை குறித்து தலைவர் ஹக்கீம் தனது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்தன.
எனினும் தனக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வ அழைப்பிதழ்களோ, கோரிக்கைகளோ வரவில்லை என ஹரீஸ் எம்.பி. தெரிவித்தார்.


மாகாண சபையில் கல்முனை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெமீலுக்கும் எந்த அழைப்பும் இல்லையென அவர் தெரிவித்தார்.


கூட்டத்தில் சில எம்.பிக்கள் பங்கேற்றிருந்த நிலையிலே ஏற்பட்டாளர்கள் தன்னைத் தேடியதாகவும் எனினும் தாம் அந்த வேளையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இருக்கவில்லை எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார். இந்த விடயத்தில் தனக்கு எத்தகைய உள்நோக்கமும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by