
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (04) காலை விசேட சந்திப்பொன்று
இடம்பெற்றது. அலரிமாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர்
லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டார். வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு
அமோக வெற்றிபெற்றதை அடுத்து நடத்தப்படும் முதல் சந்திப்பு இதுவாகும். வட
மாகாண முதலமைச்சர் பதவியேற்பு, காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட பல
விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
Post a Comment