Homeஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் வட மாகாண முதலமைச்சர்
ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் வட மாகாண முதலமைச்சர்
சி.வி. விக்கினேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, வடமாகாண அமைச்சர்களுக்கான பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் சி.வி.
சிக்கினேஸ்வரன் முன்னிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
இடம்பெறவுள்ளது.
முதலமைச்சருக்கான பதவியேற்பு நிகழ்வு அலரிமாளிகையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள
முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்வது தொடர்பில் இன்று காலை ஜனாதிபதியுடன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துரையாடலை
மேற்கொண்டார்.
ஜனாதிபதியுடன் காலை நடைபெற்ற
கலந்துரையாடலையடுத்து முற்பகல் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment