கல்முனை மாநகர சபையின் மேயராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கும் சிராஸ் மீராசாஹிவுதான் இருக்க வேண்டுமென்று சற்று முன் நடைபெற்று முடிவடைந்துள்ள கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேயர் சிராஸ் மீராசாஹிவுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான அமீர், பிர்தௌஸ், நபார், முபீத், நிஸார்தீன் சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரா் ,வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
இங்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதும் நாரே தக்பிர் சொல்லி தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்களான அமீர், பிர்தௌஸ் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஹனீபா, விகாராதிபதி சங்கரத்ன தேரா் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
பிரதான உரையை மேயர் சிராஸ் மீராசாஹிப் நிகழ்த்தினார். தனது அரசியல் ஆரம்பம் மற்றும் தனது வேலைத்திட்டங்களின் முன்னடுப்பு, கட்சியின் மீதான பற்று, மேயர் பதவிக்கால ஓப்பந்த விடயம் தொடர்பில் விரிவான உரையை சிராஸ் நிகழ்த்தினர். இவரது உரைக்கு பலத்த கரகோசம் கூட்ட மண்டபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேயர் சிராஸை சாய்ந்தமருது மக்கள் தமது தலைவனாக ஏற்றுக்கொண்டிருப்பதை இக்கூட்டம் பறைசாற்றியது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இதயமான சாய்ந்தமருதை கட்சி புறக்கணிக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்று ரீதியான தோல்விக்கு முகம் கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்
ஊடாக :
கௌரவ தலைவர்,
நம்பிக்கையாளர்
சபை,
ஜும்மா பள்ளிவாசல்,
சாய்ந்தமருது.
கௌரவ தேசிய
தலைவர் அவர்களுக்கு,
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்,
கொழும்பு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சாய்ந்தமருதின் அரசியல் சுமூகத்திற்கான தீர்மானங்கள்
கடந்த 15/10/2013
அன்று தாங்கள், கல்முனை மாநகர சபையின் கௌரவ முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாகிப்
அவர்களை குறித்த பதவியிலிருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளீர்கள்
என்பதை சாய்ந்தமருதின் பல்வேறுபட்ட
சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளாகிய நாம்
அறிகிறோம்.
இருப்பினும், கடந்த 08.10.2011 அன்று நடைபெற்ற
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
அடிப்படைத் தொண்டர்களாகிய நாம் என்றும் இல்லாத அளவிற்கு மிகையான ஆர்வம், நம்பிக்கை, விசுவாசங்களுடன் மாத்திரம் கட்சிக்கான தேர்தல்
பணிகளைச் சுமந்தவர்களாகவும், கட்சியின்
வெற்றிக்காக அயராது உழைத்து, கல்முனை மாநகர சபைக்கான
தேர்தல்கள் வரலாற்றில் நமது கட்சி ஒரு ஆசனத்தை மேலதிகமாக பெறும் அளவிற்கு எதிர்க்கட்சியினரை அக்களத்தில் தோற்கடித்ததையும், விஷேடமாக எமது மண்ணில் அவர்களை தொடர்ந்தும் நிலைகொள்ளாமல் ஆக்கியதையும் தாங்கள்
நன்கு அறிவீர்கள்.
இவ்வாறு, எமது
கட்சியின் மாபெரும் வெற்றிக்கும், நம்பகத்திற்கும் எமது மக்கள் இட்ட மாபெரும் முதலீட்டிற்கு இலாபகமாக
சாய்ந்தமருதின் கடந்த 35 ஆண்டுகள் அரசியல் அதிகார வரலாற்றில், ஆற்றல் மிக்க ஒரு முதல்வரை எங்கள் மாநகர ஆட்சிப்பிரதேச மக்களுக்கு பணிசெய்ய
பாரம்சாட்டிய உங்களை இத்தருணத்தில் மீண்டும் ஒரு முறை நன்றிகளுடன் நினைவு
கூறுகின்றோம்.
நாமும் எமது
கட்சியும் இவர்மீதுவைத்த நம்பிக்கை ஒன்றும் வீணாகிப்போகவுமில்லை. சிறந்த நிருவாகத்திறனும், பிரதேச பாரபட்சமற்ற மனோபாவமும்,
கட்சியின் தொண்டர்களை அரவணைத்து பயணிக்கும் ஆற்றலும் மிகையாகப் பெற்ற ஒரு
முதல்வராக, இலங்கை முதல்வர்களுள் மாணிக்கம் என்றும், இவரை நான்
காண்கின்றேன் என்று சாய்ந்தமருதுதில்
நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தாங்கள் பாராட்டி வியந்ததற்கினங்க, இவரின் திருப்திகரமான
நல்லாட்சிக்கான சாட்சியாளர்களாக,
கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற இம்மாநகர ஆட்சிப்பிரதேச
மக்களே உள்ளனர் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு மிகத்தாழ்மையுடன் கொண்டுவர
விரும்புகின்றோம்.
தாங்கள் ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர்
என்கின்ற அந்தஸ்திலும், கலாநிதி சிராஸ் மீராசாகிப் அவர்கள்
தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமாக செயற்படுகின்ர கட்சியின் ஒரு
அதிஉயர்பீட உறுப்பினர் என்கின்ற அடிப்படையிலும், குறித்த பதவி இராஜினாமவிற்கான
தங்களின் கட்டளையும், இது குறித்து கௌரவ
முதல்வர் அவர்களின் தலைசாய்ப்பும், கீழ்படிதலும் நமது பேரியக்கத்தின் மீதான தொண்டர்களின் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு
உண்டான கட்டுப்பாடு, ஒழுக்கநெறிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான
போசனைகளாகும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.
சாய்ந்தமருதின்
அரசியல் அபிலாஷைகளில் ஒன்றை சற்று மீட்டிப்பாற்போமேயானால், அது இற்றைக்கு 15 ஆண்டுகளுக்கு
முன் சாய்ந்தமருதிற்கான ஒரு தனியான
உள்ளூராட்சி சபையை வேண்டி நின்றதாகவே இருக்கும். இருந்தபோதிலும், சென்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் வெற்றிக்குப்பின்னர், அச்சபையின் முதல்வர்பதவி சாய்ந்தமருதிற்கு வழங்கப்பட்டதனால் மக்களின்
அவ்வாறானதோர் கோரிக்கை வீரியம்பெறாமல்
சற்று பிற்போடப் பட்டிருந்ததுதான் உண்மை.
இதுதவிர, இவ்வளவு
காலமும் கௌரவ முதல்வர் அவர்கள் கல்முனை மாநகரத்தை நிர்வகித்துவந்த பாதையில், சபையின் சக கௌரவ உறுப்பினர்களுடன் இணைந்து தீட்டிய பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான அபிருத்தித் திட்டங்களும் பல்வேறு பிரதேசங்களில் நடைமுறையில் பாதி வழியில் இருந்துவருவதையும், இதனை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்க தற்போதைய முதல்வரின் பதவியிருப்பு மிக அவசியம் என்பதையும், தங்களின்
சிறப்புக்கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
இருப்பினும், சாய்ந்தமருது பொது மக்களாகிய நாம் எமது கட்சிக்கு ஆற்றிய, ஆற்றி வருகின்ற தொண்டுகளையும், ஆதரவுகளையும் அங்கீகரித்து, நீங்கள் அன்று வழங்கிய கல்முனை மாநகர சபைக்கான
முதல்வர் பதவியை தொடர்ந்தும்
நிலைபெறவைக்கவும், அதனூடாக சாய்ந்தமருதின் எதிர்கால அரசியல் சுமூகவாழ்வு
ஒன்றிற்கான எமது நிலைப்பாட்டையும் விளக்கி நிற்கின்ற கீழே குறிப்பிடப்பட்டுள்ள
சாய்ந்தமருது பொதுமக்களின் ஏக மனதான தீர்மானங்களை தங்களின் மேலான கவனத்திற்கு
கொண்டு வருவதுடன் அதற்கான ஒப்புதலையும் தங்களிடம் இத்தால் நாடி நிற்கின்றோம்.
தீர்மானம்
- 01 :
கல்முனை மாநகர
சபையின் கௌரவ முதல்வராக கலாநிதி சிராஸ்
மீராசாகிப் அவர்கள் தற்போது வகித்துவரும்
பதவியில் குறித்த சபையின் இம்முறைக்கான ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்தும்
பதவியில் இருக்க எமது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஒப்புதலையும்
அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.
தீர்மானம்
- 02 :
தற்போது சாய்ந்தமருதின்
அரசியல் அதிகார சுமூகத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலையும், சவாலையும், எதிர்காலத்தில் பூரணமாக தவிர்த்துக் கொள்ளும்
நல்லெண்ணத்தில், அடுத்து வருகின்ற ஊள்ளூராட்சிக்கான தேர்தலை
சாய்ந்தமருது தனியான ஓர் உள்ளூராட்சி மன்றமாக நின்று சந்திக்க எமது கட்சியான ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் - 03 :
35 ஆண்டுகளுக்கு
பிறகு எமது ஊருக்கு கிடைத்த மாநகர
முதல்வர் எனும் இம்மாநகர சபையின் முதல்வர்
பதவியை, அரசியல் அந்தஸ்தை நாம் நிரப்பமாக அனுபவித்துகொள்ள, எமது கட்சியின் சம்பந்தப்பட்ட தலைமை பீடத்துடன் சாய்ந்தமருது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய
குழு சுமூகமாக பேசி நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
தீர்மானம் - 04 :
சாய்ந்தமருது
மக்களின் சமூக வாழ்வியலை நெறிப்படுத்துவதில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயலின்
நம்பிக்கையாளர் சபை என்றும் தனது கடமையில் இருந்து விலகிப்போன சந்தர்ப்பங்கள்
கிடையாது. தற்போது எமது ஊரின் அரசியல் அந்தஸ்து சந்தித்துள்ள மேலே விபரிக்கப்பட்ட
இச்சூழலை நெருக்கடியிலிருந்து ஐதாக்கி இது குறித்த தீர்மானங்களை
சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு சாதகமான தீர்வை எமது மக்களுக்கு
பெற்றுத்தருமாறு நம்பிக்கையாளர் சபையினை மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
சமூக நிறுவணம் / அமைப்பு ஒப்பம்
Post a Comment