பாடல்களைப் பாடிக் கொண்டே வேலை செய்தால் களைப்பு தெரிவதில்லை என சொல்லப்படுவதுண்டு.
அதேபோல் மனதுக்கு பிடித்தமான வேலையை விருப்பத்துடன் செய்யும் போது வேலை செய்வதே தெரிவதில்லையென நம்மில் பலர் கூறுவதுண்டு.
இவை அனைத்துக்கும் மேலதிகமாக வேலையின் வினைத்திறனை தீர்மானிப்பதில் வேலைசெய்யும் இடத்திற்கும் பெரும் பங்கு உள்ளது.
அலுவகம் சூழல் ஊழியர்களின் மனோநிலையில் தாக்கம் செலுத்தக் கூடியவையாக உள்ளன.
இதனை மேலைத்தேய குறிப்பாக சிலிக்கன்வெலி நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன.
எனவே தான் அந்நிறுவனங்கள் வேலைக்கு
மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் வேலைசெய்யும் சூழலில் பணியாளர்கள்
சந்தோஷமாகவும் , மன நிம்மதியுடனும் பணியாற்றும் வகையிலான விதத்தில் பல்வேறு
வசதிகளுடன் அலுவலகங்களை அமைத்துள்ளனர்.
இதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் அலுவலகங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இதேபோல தற்போது கூகுளின் யுடியூப் நிறுவனத்தின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள தலைமையகத்தின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை நாம் சொல்வதை விட நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்.








Post a Comment