ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழுக்
கூட்டம் கடந்த வெள்ளிக் கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில்
நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், பைசல் காசீம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பமாகி சற்று நேரத்தி்ல் கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மெதுவாக யாருக்கும் தெரியாமல் மாயமாக மறைந்து விட்டார். கூட்டத்தில் மக்கள் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவார்கள் என்பதற்காகவே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்திலிருந்து மறைந்ததாக கதைகள் கதைக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு முதலும் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் கலந்து கொண்டு விட்டு மாயமாய் மறைந்து போயிருந்தார். அமைச்சர் ஹக்கீம் தேடியபோது அவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டதும் சுவாரசியமான விடயமாகும்.
மக்கள் பிரதிநிதிகள் மக்களைக் கண்டு ஏன்தான் ஓடி ஒளிந்து கொள்கின்றார்களோ தெரியவில்லை. காலம் வரும் வாக்கப் பிச்சை கேட்க வரத்தானே வேண்டும். அப்போது பார்த்துக் கொள்வோம் என மக்கள் கதைப்பது எங்களுக்கு விளங்குகின்றது.
இப்போது இதையெல்லாம் நீங்கள் அலட்டிக் கொள்ளமாட்டீர்கள். தோற்றுப்போய் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து இருக்கும் போதுதான் இதையெல்லாம் சிந்திப்பிர்கள்.

Post a Comment