
முகப்புத்தகத்துக்கு இலங்கையில் தடை விதிக்கும் நோக்கம் எதுவும் உள்ளதா என்று எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
அக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் குணவர்தன, அவ்வாறானதொரு நோக்கமில்லை என்று குறிப்பிட்டார்.
பாணந்துறை சுமங்கல மகளிர் கல்லூரியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேஸ்புக் என்பது இலங்கையிலும் ஒரு விஷமாகப் பரிவியுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், 'எம்மால் இந்த பேஸ்புக்கை இலங்கையில் தடை செய்ய முடியும். அதற்கான வழிகளும் எம்மிடம் உண்டு. ஆனால், சட்டத்தின் மூலம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால், பேஸ்புக்கை நம்ப வேண்டாம்' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment