|
||||||||

புதிதாக பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனும் தகவலை
அறிந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்
நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை
சந்தித்து தமது கட்சிக்கும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படுமா
எனக் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரசுக்கு
பிரதியமைச்சர் பதவிகள் வழங்குவது பற்றி நாம் இன்னமும்
தீர்மானிக்கவில்லை என பதிலளித்ததாக லங்காதீப பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது.
இதனையடுத்த பிரதியமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த தனது
கட்சியின் எம்.பி.க்களை அன்றிரவே தனது வீட்டுக்கு அழைத்த ஹக்கீம்,
ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்துவிட்டு
அமெரிக்கா நோக்கிய உத்தியோகபூர்வ விஜயத்தை தொடங்கியதாகவும் அப்
பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட 9 பிரதியமைச்சர்
பதவிகளில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட
சிறுபான்மையினர் எவருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல, பிரதியமைச்சர் பதவிகள் வழங்கும் பணி முற்றுப்
பெறவில்லை. தேவைக்கேற்ப வழங்கப்படலாம் எனக்
குறிப்பிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment