(சித்தீக் காரியப்பரின் பேஸ்புக்கிலிருந்து..!)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான கௌரவ ரஊப் ஹக்கீம் அவர்களே!
கல்முனை மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பில் சில கருத்துகளை உங்கள் முன்வைக்க வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.
கல்முனையின் தற்போதைய மேயரான சிராஸ் மீராசாகிபை முன்னர் செய்து கொண்ட
ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீங்கள் இப்போது பதவி விலகுமாறு
கேட்டுள்ளீர்கள். இதில் தவறு எதனையும் காண முடியாது. எமது கட்சியின் தலைவர்
என்ற அடிப்படையில் உங்களுக்குள்ள அதிகாரங்கள், தத்துவார்த்தங்களின் கீழ்
இந்த வேண்டுகோளை நீங்கள் அவருக்கு விடுத்துள்ளீர்கள். அது சரியானதே.
எமது கட்சியைச் சேர்ந்தவர், தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டவர் என்ற
வகையில் தற்போதைய மேயரும் பதவி விலக வேண்டும் என்பதிலும் மாற்றுக்
கருத்துக்கு இடமில்லை.
ஆனால், கல்முனையின் இன்றைய நிலைமை தொடர்பில் நீங்கள் சிந்தித்துப்
பாருங்கள். இன்று அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது உள்ளுராட்சி
மன்றத்தின் ஊடான அபிவிருத்தியாக மட்டும் காணப்படுகிறதே தவிர மத்திய அரசின்
நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி என்று
சொல்லுமளவுக்கு ஒன்றும் அங்கில்லை. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
பல்வேறு பிரச்சினைகள், நிதிப் பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியில் ஒரு
பேராட்டத்துடனேயே கல்முனையின் அபிவிருத்தி கடந்த இரு வருடங்களாக
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறானதொரு நிலையில் மேயர் மாற்றம் என்பது வெண்ணை திரண்டு வரும் வேளையில்
தாழியை உடைப்பதாகி விடும். இது கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட
பிரதேசத்தின் முழு அபிவிருத்தியையும் ஸ்தம்பிதமடையச் செய்து விடும்.
எது எப்படியோ..கல்முனை மேயரான சிராஸ் மீராசாகிப் பதவிலிருந்து நீங்கினாலும்
அந்த இடத்துக்கு உங்களால் நியமிக்கப்படுபவர் நிச்சயமாக கல்முனை
பிரதேசத்தில் வாழும் மக்களின் வலிகளைப் புரிந்து சேவையாற்றக் கூடிய ஒருவராக
இருக்க வேண்டும். இந்த விடயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களை மக்களாக மதிக்கக் கூடிய ஒருவரே அந்தப் பதவிக்கு வரவேண்டுமே தவிர
கல்முனையின் புதிய யேமராக ”மேயர் மீனாட்சிகளை” நீங்கள் நியமித்து
விடாதீர்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
மக்களைப புரிந்து கொண்டு மக்களுடன் மக்களாக நின்று சேவை செய்யக் கூடிய
ஒருவரை நீங்கள் வேண்டுமானால் அடுத்த மேயராக நியமியுங்கள். ஒப்பந்தம்
என்பதற்காகவும் சிலரைத் திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் முடிவுகளை
அவசரப்பட்டு எடுத்து விடாதீர்கள்.
இன்று கல்முனைக்குடியும் சாய்ந்தமருதுவும் துருவப்படுத்தப்படும் நிலை
தோன்றியுள்ளது. இவ்வாறான நிலையை ஏறபடுத்தியவர்கள் அந்த இரு பிரதேசங்களையும்
சேர்ந்த மக்கள் அல்லர். நமது கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளே
என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
கல்முனை மேயரான சிராஸ் மீராசாகிபை பதவிலியிருந்து நீக்கி விடுங்கள்
பரவாயில்லை. சொன்னபடி அவை நடக்கட்டும். ஆனால், நீங்கள் அந்த இடத்தில்
நியமிக்கும் எந்த ஒரு நபராயினும் சரி அவர் தொடர்பில் நீங்கள் ஒரு களப்
பரிசோதனையைச் செய்து கொண்டு தீர்மானத்தை மேற்கொள்ளுங்கள்.
இந்த விடயத்தில் நீங்கள் நின்று நிதானித்து முடிவைக் காணுங்கள். கல்முனைப்
பிரதேச பள்ளிவாசல் நிர்வாகங்களுடன் கலந்துரையாடுங்கள், சிவில் சமூகம்,
புத்தி ஜீவிகளுடன பேசி இது தொடர்பில் முடிவினை எட்டுங்கள்.
ஒருவருக்குப் பதவி கொடுக்க வேண்டுமென்பதற்காக அதனைக் கொடுத்து விட்டு அதன்
பின் விளைவுகளை முழு கல்முனை சமூகமும் சுமக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி
அதன் பழிச் சொல்லையும் நீங்களே சுமக்கும் நிலைக்குச் சென்று விடாதீர்கள்
இதற்கு மேலாக எமது கட்சியின் செல்வாக்கை இல்லாமல் செய்து விடாதீர்கள்.
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இன்று நடப்பது மாமனிதர் மர்ஹும் அஷ்ரஃபின்
மண்ணில் என்பதனை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
கல்முனைக்கு இன்று தேவை மக்களுடன் மக்களாக நின்று சேவை செய்யக் கூடிய ஒரு
மேயரே. அவர் எவராக இருந்தாலும் பரவாயில்லை. கல்முனைப் பிரதேச மக்களை
வேடுவர் சமூகமாக நினைப்போரை பதவியில் அமர்த்தி விடாதீர்கள். கொழும்புக்கு
வாருங்கள். உங்கள் விஷயத்தைப் பேசலாம் என்று சொல்லி கொழும்புக்கு வந்த
பின்னர் இப்போது என்னைச் சந்திக்க முடியாது பிறகு வாருங்கள் என்று
கூறுவோருக்குப் மேயர் பதவியைக் கொடுத்து விடாதீர்கள்,
தொழு நோயாளியையும் காச நோயாளியையும் தொட்டு அனைத்து ஆறுதல் சொல்லி அவருக்கு உதவக் கூடிய ஒருவரையே நீங்கள் மேராக நியமியுங்கள்.
கசினோவும் களியாட்டமும் கொழும்புக்கு வருவதற்கு முன்பே கல்முனைக்கு கொண்டு
வரக்கூடிய மேற்கத்தைய பாணியை பலாத்காரமாகப் பின்பற்றும் எவரையும் நீங்கள்
மேயராக்கி விடாதீர்கள். இது எனது மன்றாட்டம்.
Post a Comment