
தென்கிழக்கு பல்கலை கழக மாணவர்களில் நால்வருக்கு 10 திகதி வரை மீண்டும் விளக்க மறியல் ஏனையோருக்கு பிணையில் செல்ல அனுமதி
-
அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து ஏற்பட்ட அமைதி இன்மையின் காரணமாக 53 மாணவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.
இன்று சம்மாந்துறை நீதிமன்றத்தில் இவர்களது வழக்கு விசாரிக்கப்பட்ட போது இவர்களில் நால்வருக்கு 10 திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறும் ஏனையோருக்கு பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
மறியல் நீடிக்கப்பட்டவர்கள் தவறான தகவல்களை வழங்கி இருந்ததன் காரணமாகவே 10 திகதிவரை மறியல் நீடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment