|
||||||||

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் காணிகள்
அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசின் கவனத்தை
ஈர்க்கும்பொருட்டு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றங்களிலும்
மாகாண சபையிலும் கவனயீர்ப்புத் தீர்மானங்களை
நிறைவேற்றவுள்ளதாக அக் கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி
எம்.பி. விடிவௌ்ளிக்குத் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தாருஸ் ஸலாமில் இடம்பெற்ற கட்சியின் அரசியல்
உயர்பீடக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்
அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கென செயற்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. கட்சியின்
ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களிலும் கிழக்கு மாகாண
சபையிலும் கவனயீர்ப்புத் தீர்மானங்களை நிறைவேற்றி முஸ்லிம்களின்
காணிப் பிரச்சினைகளும் காணி அபகரிப்புகளும் அரசாங்கத்தின்
கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது என்றும் ஹசன் அலி எம்.பி.
குறிப்பிட்டார்.
Post a Comment