கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு குழுக்கூட்டம் நேற்றிரவு முதலமைச்சர் தலைமையி்ல் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் முதலமைச்சரிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கின்றார்.
அண்மையில்
வழங்கப்பட்ட கிராம அபிவிருத்தி உத்திகோகத்தர்களுக்கான இடமாற்றம் அம்பாரை
மாவட்டத்தில் மாத்திரம் முதலமைச்சர் ரத்துச் செய்தமை பற்றி தெளிவான
விளக்கத்தை வழங்க வேண்டுமென நஸீர் கூறிப்பிட்டபோது, முதலமைச்சர் நழுவல்
போக்கான பதிலை வழங்க முற்பட்டபோது நஸீருடன் இணைந்து மாகாண அமைச்சர்
மன்சூர் புல்மோட்டை அன்வர் ஆகியோர் இதை ஏற்க முடியாது உடனடியாக இடமாற்றத்தை
அமுல்படுத்த வேண்டும் என்று பலத்த குரலில் சத்தமிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல
முதலமைச்சருக்கும், மாகாண சபை உறுப்பினர் நஸீருக்குமிடையி்ல் தொடர்ந்தும்
வாக்குவாதம் இடம்பெற்றிருக்கின்றது. ஒரு கட்டத்தில் இருவரும் கைவைக்காத
குறையாக எல்லை மீறிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இதனைப்
பார்த்துக் கொண்டிருந்த ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் இதற்கெல்லாம் காரணம்
அமைச்சர் உதுமாலெப்பைதான் எனக் கூறினர். 30 வருடகாலமாக ஒரே இடத்தில் கடமை
புரிகின்ற உத்தியோகத்தரை தொடர்ந்தும் அதே இடத்தில் வைத்துக்கொள்ள
உதுமாலெப்பை முயற்சித்ததே இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமாகும்.
அட்டாளைச்சேனையில்
அமைச்சர் உதுமாலெப்பை தரப்பிற்கு குறிப்பிட்ட கிராம அபிவிருத்தி
உத்தியோகத்தர் பல வழிகளிலும் உதவி செய்திருக்கின்றார் எனக்
கூறப்படுகின்றது.
Post a Comment