
காலி, எல்பிடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
குருந்துகஹத்தெக்ம பகுதியில் நகைக் கடை ஒன்றை (சனிக்கிழமை) திறக்க முனைந்த
முஸ்லிம் வர்த்தகருக்கு எதிராக ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள்,
பிரதேசிய சபை தலைவர் உட்பட சிஹல ராவய இனவாத அமைப்பு மேற்கொண்ட பாரிய இனவாத
எதிர்ப்பு நடவடிக்கையால் குறித்த முஸ்லிம் வர்த்தகர் பின்வாங்க
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதியுடன் சிஹல ராவய
எனினும் குறித்த விடயத்தில் தலையிட்ட
அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குறித்த இனவாத அமைப்பை எச்சரித்து
வெளியேறுமாறு கோரியபோதும் முஸ்லிம்களை அப்பகுதியில் வர்த்தகம் செய்ய
அனுமதிக்கக்கூடாது எனும் தமது திட்டம் நிறைவேறியுள்ளதாகவும் இது தமக்குக்
கிடைத்த வெற்றியெனவும் பிரதேச சபைத் தலைவர் காமினி அமரவன்ச பகிரங்கமாக
தெரிவித்துள்ளார்.
நாடு முன்னேற்றத்தை காணத் துடிக்கும் இந்த
யுகத்தில் இவ்வாறான இனவாத நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என கூறிய
அமைச்சர் வர்த்தக நிலைய குத்தகைக்காக முஸ்லிம் வர்த்தகரால் வழங்கப்பட்ட 5
லட்சம் ரூபாய் பணத்தை தானே வழங்குவதாகவும் கூறியுள்ள போதும், இனவாத
பயத்தால், முஸ்லிமாக இருக்கும் ஒரே காரணத்தால், ஜனநாயக நாட்டின் ஒரு
பகுதியில் ஒரு குடிமகன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாமல்
போயிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த காலத்திலும் எல்பிடிய
பகுதியிலிருந்து இனவாத சக்திகளின் அழுத்தத்தால் குத்தகை மறுக்கப்பட்டு பல
முஸ்லிம் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை குறித்த சம்பவம்
தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் எல்பிடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஒன்றும் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தரப்பில்
தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment