ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட 11
பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
மாத்தறை நீதவான் ருவன் சிசிரகுமார இந்த உத்தரவை இன்று (14) பிறப்பித்துள்ளார்.
மாத்தறை நகரில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோதலுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 33 பேர் இன்று அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்னவின் மகன் சாமிக குணரத்னவும் உள்ளடங்கியதோடு மோதலுடன் தொடர்புடையவர் என அவர் அடையாளம் காணப்படவில்லை.
எனினும் இன்றைய அடையாள அணிவகுப்பில் மூவர் இனங்காணப்பட்டுள்ளதாக அத தெரண - செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 33 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment