|
||||||||

இலங்கையில் பிரிவினைவாதம் இப்போது புதியதொரு முறையில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வரன் வடக்கை கேட்கிறார். ரவூப் ஹக்கீம்
கிழக்கைக் கேட்கிறார். தமிழர்கள் வடக்கு அவர்களது தாயகம் என்கிறார்கள்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் கிழக்கு அவர்களுக்குரியது என்கிறார்கள் என
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
குறிப்பிட்டார்.
அண்மையில் அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற
பொதுபலசேனாவின் கூட்டமொன்றில் உரை நிகழ்த்துகையிலேயே ஞானசாரதேரர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
‘இன்னும் சில நாட்களில் கொழும்பும் அவர்களது என்பார்கள். புனித தலதா
மாளிகை அமைந்துள்ள கண்டியும் அவர்களுக்குரியது என்று கூறுவார்கள்.
இவ்விடயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்நாட்டின்
வரலாற்றுரிமை கொண்ட இனம் எது? வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறி
வாழ்ந்து கொண்டிருக்கும் இனம் எது? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த
வேண்டியுள்ளது.
இந்நாட்டின் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்பும் ஆசியாவிலேயே உயரமான
கோபுரம் அமைப்பதற்கு முன்பும் இந்நாட்டின் தேசிய இனமாக உருவாக்கப்பட்ட மனித
வரலாற்றை சொல்லிக் கொடுப்பது அவசியமாகும். நாட்டின் ஆட்சியாளர்களால் புனித
நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரலாற்றுப் புகழ் மிக்க இடங்கள் உல்லாச
பயணிகளின் பொழுது போக்கு இடமாக மாற்றப்படவுள்ளன. இந்த திட்டங்களை
கிழித்தெறிய வேண்டும். அநுராதபுர நகர் பெளத்த நகர் எனத் திட்டத்தில் ஒரு
வார்த்தையாவது குறிப்பிடப்பட்டில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவி பிரமாணனத்தின் போது நாட்டைப்
பிரிப்பதற்கு நான் ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டேன். நாட்டின்
ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன் என்றே சத்தியம் செய்கிறார்கள். ஆனால்
உள்ளூராட்சி அரசியல் யாப்பின் படி இவ்வாறான ஒரு சத்தியப் பிரமாணம் செய்து
கொள்ளப்படுவதில்லை. இதனாலே வடக்கிலும் கிழக்கிலும் பிரச்சினை
தோன்றியுள்ளது.
இன்று எமது பிள்ளைகளுக்கு இருப்பது சுப்பர் ஸ்டார், லிட்டில் ஸ்டார்
மற்றும் காதல் செய்வதற்கு பூங்காவனங்களாகும். இதன் மூலம் அநுராதபுரத்தில்
ருவன் வெலிசாய, மிரிஸ்பெட்டிய ஜேதவ போன்று வரலாற்றுப் புகழ் மிக்க பெளத்த
படைப்புகளைப் பார்த்துக் கொண்டே காதல் செய்ய முடியும்.
இதேபோன்று மதம் மாற்றுவதற்காக இன்று வீடு வீடாக செல்கிறார்கள். அவர்களை
பொலிஸில் பிடித்துக் கொடுக்காதீர்கள். பொலிஸாரினால் எதுவும் செய்ய
முடியாது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை, எனவே
நாம் சட்டங்களை இயற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment