
புதிய பிரதியமைச்சர்களாக 9 பேர் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்களே இவ்வாறு பிரதியமைச்சர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
சனத் ஜயசூரிய, லக்ஷ்மன் பெரேரா, சரத் வீரசேகர, வை.ஜீ.பத்மசிறி,
விக்டர் பெரேரா, ஹேமால் குணசேகர, மோஹன் லால் கிரேரோ,
நிஷாந்த முதுஹெட்டிகம, சரத் முத்துகுமாரண ஆகியோரே இவ்வாறு
பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் பிரதியமைச்சர்களாக நியமனம் பெற்றவர்களில்
சிறுபான்மையினத்தவர் எவரும் இடம்பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment