13ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம்
அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்நாட்டில் சிறுபான்மையினர்
பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அதிகாரம்
பகிரப்படுவதற்கு உதவி புரிய வேண்டும். சிறுபான்மையினரின்
உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்திய வெளிவிவகார
அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு - சினமன்கிரான்ட் ஹோட்டலில் நேற்று மாலை இந்திய வெளிவிவகார
அமைச்சருடனான முஸ்லிம் காங்கிரஸின் சந்திப்பின் போதே இவ்வாறு
கேட்டுக்கொண்டார். சந்திப்பில் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தைத் தவிர
அனைத்து முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும்
கலந்துகொண்டனர்.
சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளின்
மீள்குடியேற்றம், இந்திய வீடமைப்புத் திட்டத்தில்
முஸ்லிம்களுக்கான பகிர்வுஇ அதிகாரப்பகிர்வு உட்பட பல விடயங்கள்
பற்றி கலந்துபேசினோம்.
கட்சியின் அரசியல் நிலைப்பாடு, கொள்கைகள் என்பன விளக்கப்பட்டன.
சந்திப்பு மிகவும் சாதகமாக அமைந்தது. மற்றும் கடந்த மாகாண சபைத்
தேர்தலில் கட்சி அடைந்துள்ள வெற்றி என்பன எடுத்து விளக்கப்பட்டன.
மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட மாட்டாது என்ற எமது
நிலைப்பாட்டினையும் தெரிவித் தோம்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் சில மாவட்டங்கள்
விடுபட்டுள்ளதையும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளதையும் கூறினோம். இந்திய
வீடமைப்புத்திட்டம் வட மாகாணத்தில் அரசியல் பாகுபாடின்றி
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும்
வேண்டிக்கொண்டோம் என்று தெரிவித்தார்.
Post a Comment