தெற்கு அதிவேக பாதையான கொழும்பு காலிக்கு அடுத்தாக மேற்கு பகுதியில் உள்ள
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதியால்
உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு
விடப்படவிருப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இப்பாதை
திறக்கப்படுவதால் பொது நலவாய மாநாட்டுக்கு வரும் அரச தலைவர்களும்
பிரமுகர்களும் இப்பாதை வழியாக பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படிப்பாதை வழியாக கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு இடையிலான
பயன நேரம் சுமார் இருபது நிடங்கள் என்பதுடன் பழைய கொழும்பு நீர்கொழும்பு
வீதியூடான விமான நிலைய பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
மேற்படிப் பாதையின் இருபகுதிகளும் அழகான முறையில் புனர் நிருமானம்
செய்யப்பட்டுள்ளதுடன் தேவையான இடங்களில் மலர்ச் செடிகளும்
வைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்வேலிகள், மேம்பாலங்கள் என்பன மக்கள் மற்றும்
கால் நடைகளின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்பாதையை இடைமறித்துச் செல்லும் கால்வாய்கள் மற்றும் ஆறுகள்
என்பனவும் அவற்றின் பார்வைக்கு எட்டிய பகுதிகள்வரை கவர்ச்சியான முறையில்
அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment