![basheer-segu-dawood-speech[1]](http://kinniya.net/images/photos/2013/09-2013/08/basheer-segu-dawood-speech[1].png)
இறைவா! என்எதிரிகளை நான்பார்த்துக் கொள்கிறேன்... என் நண்பர்களிடமிருந்து நீதான் என்னைப்பாதுகாக்க வேண்டும்...!' என்றுயாரோ அறிஞனின் பிரார்த்தனையை எங்கேயோ வாசித்த ஞாபகமிருக்கிறது. இப்படியானதொரு நிலைதான் இன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன்தலைவர் ரவூப்ஹக்கீமுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்
ஏற்பட்டிருக்கும் உள்முரண்பாடு இன்று சந்திசிரிக்குமளவிற்கு
பூதாகரமாகியுள்ளது. இத்தனைநாளும் யார்என்னபேசினாலும் அதைப்பற்றித்தான்
எதுவும்பேசாதிருந்த தலைவர்ஹக்கீம் தற்போது கட்சியின்தவிசாளர்
பஷீர்சேகுதாவூத்பற்றி மிகக்காரசாரமாக விமர்சித்து வருகிறார். அண்மையில்
புத்தளத்தில் நடந்ததேர்தல் பிரசாரக்கூட்டத்தில் வாக்குக்கோரியதைவிடவும்
அமைச்சர் பஷீர்பற்றிப்பாடியவைதான் அதிகம்என்று சொல்லுமளவிற்கு
விமர்சனக்கணைகள் பறந்தன.அரசாங்கத்தின் எடுபிடியென்றும்,
கையாலாகதவர் என்றும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவிக்கு
அகராதியில்தான்அர்த்தம் கணாவேண்டியிருக்கிறதென்றும் பஷீர் மீதான
தாக்குதல்களை தலைவர் ரவூப்ஹக்கீம் மேற்கொண்டிருந்தார்.
இன்று சிறுபான்மையினருக்கெதிரான
திட்டமிட்ட காய்நகர்த்தல்கள் பேரினவாதச்சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்றமை
யாவரும் அறிந்ததே. அவ்வாறானவிடயங்களில் ஒன்றாகவே சிறுபான்மைத்
தலைமைத்துவங்களுக்கிடையில் உட்பிளவுகளை ஏற்படுத்தி
வலிமைக்குறைப்புச்செய்வதும் காணப்படுகின்றது. இலங்கையைப்பொறுத்தவரையில்
அவ்வாறானசதிவலைகளில் அதிகம் சிக்கிச்சுயநலச் சூதாட்டங்களில் ஈடுபடுவது
முஸ்லிம் தலைமைத்துவங்களே என்றால் அதற்குமாற்றுக் கருத்திருக்க முடியாது.
'கருத்துவேறுபாடென்னும் கரையான்வந்து –
உங்கள் புரிந்துணர்வைச்சீரழிக்கக்கூடும் மிகவும் புத்தியுடன்
நடந்துகொள்ளுங்கள்' என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்
எம்.எச்.எம்.அஷ்ரபினால் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்று மரத்தை
ஆளுக்கொருகிளையாகப் பெயர்த்து ஆளுக்கொருதிசையில் நிற்கிறார்கள்.
வாக்களித்தவர்கள் பற்றிய சிந்தனையில்லை...
மக்கள் நலன்பற்றிக் கவலையில்லை... உரிமைக்குரலாய் ஒலிக்க
முதுகெலும்பில்லை... ஆனால் எல்லோருக்கும் சொகுசானவாழ்வும்
அமைச்சுப்பதவியும் மாத்திரம் வேண்டும்...! இப்படித்தான்
சென்றுகொண்டிருக்கிறது இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்களின்
கையாலாகாத்தனங்கள். அந்தவரிசையில் முளைத்திருக்கின்ற இன்னொரு பிரச்சினைதான்
கட்சிக்குள்ளிருந்து கொண்டேகட்சிக்கெதிராகக் காய்நகர்த்தும்
முஸ்லிம்காங்கிரஸின் தவிசாளர் பஷீசேகுதாவுதின் சூதாட்டமும்
எதோ அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக,
நியாயவாதியாகத் தன்னைத்தானாகவே நிரூபித்து ஊடகங்களிடம் பேசும் அமைச்சர்
பஷீர்சேகுதாவுத் அவர்கள் நீண்டகாலமா ககட்சிக்குள் இருந்துகொண்டு
தலைமைத்துவம் உட்பட கட்சியையும் ஏனைய அங்கத்தவர்களையும்
விமர்சித்துவந்தவர். ஏதோ வேண்டாவெறுப்புடனான, எடுத்தேன்கவிழ்த்தேன் என்ற
முடிவாகவே அவரது செயற்பாடுகளும் காணப்பட்டன. கிழக்கு மாகாணசபைத்
தேர்தலின்போது அரசாங்கத்தைவிட்டுத் தனித்துப்போட்டியிடுவதானால்
அரசவளங்களைப் பயன்படுத்தக்கூடாதென்றும் அவ்வாறு செய்தால் அது துரோகமென்றும்
கோசமிட்டார். மறைமுகமாக அரசுடன் இணைந்தே போட்டியிடிவேண்டும்
என்றுவலியுறுத்தினார். அது கைகூடாதபோது தமது கட்சி
தனித்துப்போட்டியிடுவதனால் தனது பிரதிஅமைச்சர் பதவியைராஜினமாச்
செய்துவிட்டுத்தான் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறேன்
என்றுகாட்டிக்கொண்டார். பின்னர் எல்லாம்முடிந்தது இவரதுநேர்மையும்
யாவருக்கும்புரிந்தது. யாருக்குமே சொல்லிக்கொள்ளாமல் கழற்றிய
பதவிக்கோட்டைவிடவும் இதுகாஸ்ட்லியானது எனஜனாதிபதி அவரைக்கூப்பிட்டு
ஊக்கவிப்புத்திறன்அமைச்சு எனும் புதியகோட்டை கண்டுபிடித்து அணிவித்து
பஷீர்சேகுதாவூத் அவர்களை மகிழ்வித்தார்.
தலைவருக்கீடான முழுஅமைச்சைத்தான்
பெற்றுவிட்டமமதையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மாகாணசபைத்தேர்தல்
நடவடிக்கையிலும் அமைச்சர் பஷீர்சேகுதாவூத் தனதுவழமையான' நீதிநியாயங்களை'
நீதிஅமைச்சரிடம் பேசத்துவங்கினார்.
இந்த மாகாணசபைத்தேர்தலில்
தனித்துப்போட்டியிடுவதிலும் கட்சிக்கும் பஷீர்சேகுதாவுதிற்கும் வழமையான
கருத்துமுரண்பாடுகள் வெடித்தன. தருணத்திற்குத் தருணம் இடம்பெறுகின்ற
தொடர்ச்சியான கருத்துமுரண்பாடுகளுக்குப் பின்னணியில் அமைச்சர் பசில்
மற்றும் றிசாத்பதியுதீன் ஆகியோர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
அதாவது தலைவர் ரவூப்ஹக்கீம் அவர்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸையும்
சீரழிப்பதே அவர்களது நோக்கமெனக் கருதப்படுகிறது. இதற்காக முஸ்லிம்
காங்கிரஸிலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களும் பஷீருக்கு த்துணைநிற்பதாக
நம்பப்படுவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
அமைச்சர் பஷீர்சேகுதாவூத் அண்மைக்காலமாகப்
பேசுகின்ற 'நியாயங்களை' அவரது கடந்தகால வரலாறுகளுடன்
ஒப்பிட்டுப்பார்த்தால் அவைகளைப் பேசுவதற்கு எந்தத்தகுதியும் அவரிடம் இல்லை
என்பதுபுரியும்.
ஏறாவூரைப் பிறப்பிடமாகக்கொண்ட பஷீர்
அவர்கள் ஒருஆசிரியர். அவரது அரசியல்பிரவேசம் என்பது ஈரோஸ்
இயக்கத்தினூடாகத்தான் ஆரம்பமானது. இவர் 1979 தொடக்கம் 1994 வரை ஈரோஸின்
அரசியல் கட்சிக்குழுஉறுப்பினராக இருந்துள்ளார். 1989ம் ஆண்டுபாராளுமன்றத்
தேர்தலில் ஈரோஸ் வடகிழக்குமாகாணத்தில் சுயேட்சையாகக் களமிறங்கியது. அதில்
ஈரோஸ் 12 ஆசனங்களுடன் ஒருதேசியப்பட்டியல் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
1990ம் ஆண்டு மார்ச்மாதம் இந்தியஇராணுவம்
இலங்கையை விட்டுச்சென்றதையடுத்து இலங்கை இராணுவத்தினருக்கும்
விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர்வெடித்தது. பெருந்தொகையான ஈரோஸ்
உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்தனர். தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட
ஈரோஸ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை நிராகரித்தனர். அவர்களது ஆசனம்
பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது ஈரோஸ் சார்பாகப் மட்டக்களப்பு மாவட்டத்தில்
பாராளுமன்றத்திற்குத் தெரிவான அழகுகுணசீலன் என்பவரும் தனதுபாராளுமன்ற
உறுப்பினர் பதவியைத்துறந்து ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்தார்.
இத்தருணத்தில் ஈரோஸ்சார்பாக மட்டக்களப்புமாவட்டத்தில் போட்டியிட்டுத்
தோல்வியடைந்த பஷீர்சேகுதாவூத் அவர்களுக்கு வாய்ப்புக்கிடைக்கிறது.
தான்சார்ந்திருந் தகட்சியே பாராளுமன்றத்தை
நிராகரிக்கிறது. தான்தேர்தலில் வெற்றிகூட அடையவில்லை. தனது
கட்சியைச்சார்ந்தவர் தமதுதலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு
உரிமைப்போராட்டத்திற்காய் நிராகரிக்கிறார். அந்தத்தருணத்தைப் பயன்படுத்தி
பஷீர் அவர்கள் தேர்தலில் வெற்றிபெறாமலேயே தனது கட்சியை நிராகரித்துப்
பாராளுமன்றம் செல்கிறார். இதுவே இவர் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினரான
கதை.
பின்னர் 2001ம் ஆண்டுத் தேர்தலில் பஷீர்
போட்டியிடவில்லைஇ ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் மூலமாக
பாராளுமன்ற உறுப்பினரானார். 2004ம் ஆண்டுத்தேர்தலில் பஷீர் போட்டியிட்டார்.
ஆனால் வெற்றியடையவில்லை. மீண்டும் அவர்தேசியப்பட்டியலில் பாராளுமன்ற
உறுப்பினராக முஸ்லிம் காங்கிரஸ்சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியால்
நியமிக்கப்பட்டார். பின்னர் 2008ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை
ராஜினமாச்செய்து முதலாவது கிழக்குமாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு
மாவட்டத்தின் பிரதமவேட்பாளராகப் போட்டியிட்டார். அதில் பிள்ளையான்
முதலமைச்சராக விருந்தபோது 2010ம் ஆண்டுவரை கிழக்குமாகாணசபையின்
எதிர்க்கட்சித்தலைவராக விருந்தார். மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்.
இதுவரைக்கும் தங்குஅரசியலேசெய்து மக்களின்
ஆணையால்அன்றி கட்சியின்தலைதடாவுதலால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த
ஷீர்சேகுதாவூத் கிழக்குமாகாணசபையில் தான் எதிர்க்கட்சித்தலைவராக
விருந்துவந்ததன் பிற்பாடு அவரது நடவடிக்கைகள் முற்றுமுழுதாக மாறத்துவங்கின.
அந்த மாற்றத்தின்தொடர்ச்சிதான் இன்றுவரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவரது வீம்புக்கும் விதண்டாவதத்திற்கும்
அவர்சொல்வதனைப் போன்று உண்மையிலே எந்தக்காரணங்களும் கிடையாது. அவையெல்லாம்
அவராகவே சொல்லிக்கொள்கின்ற நீதிநியாயங்கள். ஆனால் இதற்கு வேறுசிலகாரணங்கள்
உள்ளன.
1. 2010ம் ஆண்டு பஷீர் கிழக்கு
மாகாணசபையிலிருந்து வந்ததன்பிற்பாடு பசில்ராஜபக்ஷ போன்ற அரசாங்கத்தின்
சிரேஸ்ட அமைச்சர்களினால் அவர் அரவணைக்கப்பட்டார் என்கிறதைரியமும்
அதனால்கிடைத்த இலாபங்களும்.
2. ஏறாவூரில் ஹாபிஸ்நசீரின்
அரசியல்பிரவேசமும் நசீரைத்தன்னை அழிப்பதற்காகவே தலைவர் ஹக்கீம்
வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்கின்றபயமும்.
தான்சார்ந்திருந்த அரசியல்இயக்கம்
பாராளுமன்றத்தைப்புறக்கணித்தசமயம் தருணம்பார்த்து தனக்குக்கிடைத்த
சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி தனதுஅரசியல் இயக்கத்திற்குத்துரோகம் செய்து
பாராளுமன்ற உறுப்பினரான பஷீர்,
தேர்தல்களில் போட்டியிடாமலும்,
போட்டியிட்டுத்தோல்வியடைந்தும் கட்சியின் அரவணைப்பினால் பாராளுமன்ற
உறுப்பினராகும்பஷீர், இன்னொருகட்சியிலிருந்து (ஐக்கியதேசியக்கட்சி) கிடைத்த
மக்கள் ஆணையைவைத்து பாராளுமன்ற உறுப்பினராகி மக்களின்
எந்தவிருப்புவெறுப்பையும் அறிந்துகொள்ளாமல் அடுத்தகட்சியுடன் இணைந்து
பாராளுமன்றம் சென்றபஷீர்,
கட்சியைக் காட்டிக்கொடுக்கவோ
பிளவுபடவோவிடமாட்டேன் என்று வெறுமனே நாவளவில் கோசமிட்டுவிட்டு தற்போது
நடைபெற்றுவருகின்ற தேர்தல்பிரசாரங்களில் தமதுகட்சிக்காக
எந்தமுன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளாது வேடிக்கைபார்க்கும்பஷீர்,
எந்தவகையான காரணங்களையும் நியாயங்களையும்
பேசினாலும் அவையனைத்தும் ஏதோஒரு சுயநலம் சார்ந்ததே என்பதை அனேகர்புரிந்து
கொண்டுவிட்டார்கள். இவர்கள் யார்என்ன செய்தாலும் யார் என்ன பேசினாலும்
மக்கள் விளிப்பாக இல்லையானால் 'இனிநாட்டில் சிறுபான்மையினர் இல்லை'
என்கின்ற அறிவிப்பு சற்றுமருவி 'சிறுபான்மையினர் நாட்டுக்குத் தேவையில்லை'
என்கின்ற பிரகடணம் முன்மொழியப்பட்டாலும் தலையசைத்துவிடுவார்கள்.
அதுதவிசாளராய் இருந்தாலென்ன, தலைவராயிருந்தாலென்ன...?
Post a Comment