
சொந்த சமூகத்தால்
நிராகரிக்கப்பட்டிருந்தும் ஜனநாயக ரீதியில் தோல்வியின் காரணங்களை
ஏற்றுக்கொண்டு மீள் பயணத்தை ஆரம்பிக்க மறுக்கும் சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தமக்கு மாகாண சபைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி
கிடைத்திருப்பதாகவும் தமது உறுப்பினர்களுடன் எந்தவொரு கட்சியிடனும் கூட்டணி
சேர மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியுடனும் கிழக்கிலும்
ஆட்சிப் பங்காளர்களாக இருக்கும் முஸ்லிம் காங்கிரசின் வேடிக்கையான
அறிக்கை இதுவென அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்ற போதும் தமது
கட்சியின் முடிவு குறித்து தாம் திருப்தகரமாக இருப்பதாக அக்கட்சியின் தேசிய
அமைப்பாளர் ரபீக் ரஜாப்தீன் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment