இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்
நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை
அறிவித்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானதென ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நவிபிள்ளையை சந்தித்தவர்கள் இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக வெளியாகும் செய்தி குறித்து கருத்து வெளியிட்ட பர்ஹான் ஹக், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கருத்து வெளியிட்ட காரணத்திற்காக எவரும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பணிகளும் ஐநா சபையால் மதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நவநீதம்பிள்ளையினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)

Post a Comment