
நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ரவூப் ஹக்கீமை சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தை பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சர் ஹக்கீம் தனது அமைச்சு பதவியை பெற்ற பின்னர் அவர் முஸ்லிம்கள் கொடுத்த நியமனங்கள் தொடர்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் எல்லா வகையிலும் சமூகத்தை பிளவுபடுத்த முயல்வதாகவும், உணவு பொருட்கள் மூலமாகவும் இதனை செய்ய முயற்சிப்பதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார். அத்துடன் தமது அமைப்பு ஹலால் சான்றிதழ் முறையை முற்றாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை என்று தற்பெருமையுடன் கூறும் அமைச்சர் ஹக்கீம், சர்வதேச முஸ்லீம் தீவிரவாத வழிபாட்டு தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் புகைப்படம் பொதுபல சேனாவிடம் இருப்பதாவும், அதை அவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் வெளிப்படுத்த முடியும் என்றும் ஞானசார தேரர் சவால் விட்டார். அதை மறுத்தால் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
நேற்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த சவாலை அவர் விடுத்தார்.
பொதுபல சேனாவை குற்றப்படுத்தி பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்கள் தொந்தரவு செய்கிறீர்கள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும், உண்மையில் இது இஸ்லாமிய தீவிரவாதம் என்ற உண்மையை மறைக்க எடுக்கும் முயற்சியாகும்.
உலக பயங்கரவாத குழுக்களில் 99% மானது இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் என்றும் இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் அதிகரிப்பதாகவும் ஞானசார தேரர் குற்றம்சாற்றினார்.
Post a Comment