கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்துடன் மாநகர சபை கலை கலாச்சாரக் குழு
இணைந்து நடாத்துகின்ற கல்முனை மேயர் கிண்ணம்-2013 சுற்றுப்போட்டி
எதிர்வரும் ஜூன் மாதம் 01ம் திகதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று கல்முனை மாநகர சபை முதல்வர் காரியாலயத்தில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.
இந்த சுற்றுப்போட்டி என்றுமில்லாதவாறு மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும 20 ஓவர்கள் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் ஆரம்ப விழாவிற்கு இலங்கையின் பிரசித்திபெற்ற கிரிக்கெட் வீரரான பிரபலம் ஒருவரை கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் முதல்வர் சிராஸ் தெரிவித்தார்.
“இச்சுற்றுப்போட்டியில் இப்பிரதேசத்தின் முன்னணி கழகங்களான 16 கழகங்கள் சேர்த்துக் கொள்ளப்படும்.
இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று 1ஆம், 2ஆம் இடங்களைப்பெறும் அணிகளுக்கு முறையே 1 இலட்சம், 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும்.
இதற்காக மாநகர சபை நிதியிலிருந்து எவ்வித பணமும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
கல்முனை பிரதேச விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காகவும் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் அபிவிருத்திக்காகவும் இடப்படும் முதல் அடித்தளமாக இந்த சுற்றுப்போட்டி அமையும். என நம்புகின்றேன்.
இதற்காக கட்சி பேதங்களை மறந்து சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், எம்.ஐ.எம். அமீர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை கிரிக்கெட் சம்மேளனத் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின், செயலாளர் ஏ.பி.எம்.பைசால், உப தலைவர்களான யு.எல்.எம்.பஸீர், எஸ்.எல்.எம்.லாபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment