டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த பருவகாலத்தில் பந்துவீச்சில் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்திய ரங்கன ஹேரத், இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வருடத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற உயரிய விருதை வென்றெடுத்தார்.
வருடத்தின் அதி சிறந்த வீரர் விருதை ரங்கன ஹேரத் முதல் தடவையாக வென்றெடுத்த அதேவேளை மக்கள் அபிமான வீரர் விருதை குமார் சங்கக்கார நான்காவது தடவையாக வென்றெடுத்தார்.
டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ்ஜில் நேற்றுமுன்தினம் இரவு கோலாகலமாக நடத்தப்பட்டது.
இவ்விழாவின்போது அதி சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர் விருதை ரங்கன ஹேரத்தும் அதி சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் விருதை குமார் சங்கக்காரவும் தமதாக்கிக்கொண்டனர்.
விருதுக்கான பருவகாலத்தில் ரங்கன ஹேரத் 46 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இவர் கடந்த வருடம் டெஸ்ட் அரங்கில் அதிகூடிய விக்கெட்களைக் கைப்பற்றியிருந்ததுடன் 200 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கையர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.
குமார் சங்கக்கார குறிப்பிட்ட காலப்பகுதியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி மூன்று சதங்கள் அடங்கலாக 441 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
இதேவேளை திலக்கரட்ன டில்ஷான் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீரர் விருதையும் லசித் மாலிங்க அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் விருதையும் வென்றெடுத்தனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான விருது அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு வழங்கப்பட்டது.
வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் விருதை தினேஷ் சந்திமால் வென்றெடுத்தார். மகளிர் பிரிவில் வருடத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த சகலதுறை வீராங்கனை ஆகிய விருதுகளை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சசிகலா சிறிவர்தன வென்றெடுத்தார்.
இப்பிரிவில் அதிசிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருது சமனி செனவி ரத்னவுக்கும் அதிசிறந்த பந்துவீச்சாளினி விருது தீபிகா ரசங்கிக்காவுக்கும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை விட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சம்பியனான அணிகளுக்கும் உப சம்பியனான அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

Post a Comment