
மிக மோசமான தோல்விகளைத் தழுவி வருகின்ற
போதிலும் தொடர்ந்தும் கட்சித்தலைமையில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவை
பதவி விலகக் கோரி பேரணி ஒன்றை ஏற்பாடு செய்யப்போவதாக முன்னாள் ஐ.தே.க
உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களுமான மைத்ரி குணரத்ன மற்றும் சிரால்
லக்திலக ஆகியோர் தலைமையிலான “ஜாதிக பவுர” எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கையை
எதிர்வரும் 5ம் திகதி மாத்தறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்போவதாகவும்
முதல் கட்ட நடை ஊர்வலம் வெலிகமவுக்கும், இரண்டாம் நாள் அங்கிருந்து
காலிக்கும், மூன்றாம் நாள் அங்கிருந்து ஹிக்கடுவ, நாளாம் நாள் கொஸ்கொட,
ஐந்தாம் நாள் கொடுகுருந்துவ, ஆறாம் நாள் மொரட்டுவ மற்றும் ஏழாம் நாள்
அங்கிருந்து கொழும்பு நோக்கி ஊர்வலம் செல்லும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment