
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின்
புதல்வர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சி மட்டத்தில் பாரிய ஆதரவு இருப்பினும்
கூட அசைக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவராக காலத்தைத் தள்ளும் ரணிலின்
முந்தி எதையும் செய்ய இயலாத நிலையில் அவர் மாகாண சபை முதலமைச்சராகப்
போட்டியிடுவார் என திடீர் ஊடக பரப்புரைகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
எனினும் இதை மறுத்துரைத்துள்ள சஜித்
பிரேமதாச: எனது ஆதரவாளர்கள் என்னை ஜனாதிபதியாக்கிப் பார்க்கவே
ஆசைப்படுகிறார்கள், மாகாண சபை முதலமைச்சராக என்னை முடக்க யாரும்
ஆசைப்படவில்லை எனவே நான் மாகாண சபைத் தேர்தலில் நிற்க மாட்டேன் என
கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment