ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நாளை (01.09.2013 ) திறந்து வைக்கப்பட
உள்ள ஒலுவில் துறைமுக திறப்பு விழா ஏற்பாடுகள் ஏட்டிக்குப் போட்டியாக
நடைபெற்று வருகின்றன
துறைமுக அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஒலுவில் துறைமுக திறப்பு விழா அழைப்பிதழ்கள் விநியோகம் கடந்த சில தினங்களாக விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ் அழைப்பிதழில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, துறைமுக அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோகித அபேகுணவர்த்தன, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ,எல்,எம், அதாஉல்லாஹ் ஆகியோர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது
இவ் அழைப்பிதழ்கள் அமைச்சர் ஏ,எல்,எம், அதாஉல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்தது
இதில் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயத்தை அரசின் உயர் மட்டத்திற்கும், துறைமுக அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோகித அபேகுணவர்த்தனவின் கவனத்திற்கும் கொண்டு வந்தது இதை அடுத்து மற்றுமொரு வேறு அழைப்பிதழ் மீண்டும் அச்சிடப்பட்டு அவ் அழைப்பிதழில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நீதி அமைச்சரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ தலைவருமான றவூப் ஹகீம், துறைமுக அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோகித அபேகுணவர்த்தன, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ,எல்,எம், அதாஉல்லாஹ், சிரேஸ்டமைச்சர் பி,தயாரட்ன ஆகியோர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இவ் அழைப்பிதழ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன,
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேசிய காங்கிரஸ் மற்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ ஆகிய இரு கட்சிகளும் அதன் தலைவர்கள்,மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஏட்டிக்குப் போட்டியாக ஒலுவிலில் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருவதை காணமுடிகின்றது..

Post a Comment