இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரையும் அவர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், வடக்கிற்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார். வடக்கில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே விஜயம் செய்யவிருக்கின்றார்.
முன்னாள் போர் வலயப் பகுதிகளுக்கும் செல்லும் நவனீதம்பிள்ளை அங்கு மக்களை சந்திக்கவுள்ளார்.
அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் நவி பிள்ளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருகின்றார்.
யுத்தக்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தனது வடக்கு விஜயத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Post a Comment