வட மேல் மாகாண சபைக்கான முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசாரக்
கூட்டம் நேற்றிரவு புத்தளம் நகரில் இடம்பெற்ற போதிலும் அதில்
கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்
பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மாவட்டத்திற்கான கட்சியின் தேர்தல் பிரசார
நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக அமைச்சர் பஷீர்
நியமிக்கப்பட்டிருந்தபோதிலும் கட்சித் தலைமையுடன் ஏற்பட்டுள்ள
முரண்பாடுகளையடுத்தே அவர் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத்
தெரியவருகிறது.
இக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம்
உரையாற்றுகையில், பஷீர் சேகுதாவூத் தொடர்பில் கடும் விமர்சனங்களை
முன்வைத்ததாகவும் தெரியவருகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் வடக்கில் அரசாங்கத்துடன் இணைந்தே தேர்தலில்
போட்டியிட வேண்டும் என பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தி வந்தார்.
இருப்பினும் சகல மாகாணங்களிலும் தனித்தே போட்டியிடுவது என கட்சித்
தலைமை முடிவெடுத்திருந்தது. இந்நிலையிலேயே புத்தளம் பிரசார
நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குமாறு பஷீர் சேகுதாவூதிடம்
கட்சியின் செயலாளர் நாயகம்வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இருப்பினும் மு.கா.வின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில்
பங்கேற்பது குறித்து தான் எந்தவித தீர்மானங்களையும்
மேற்கொள்ளவில்லை என பஷீர் சேகுதாவூத் ஊடகங்களுக்கு
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment