ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை
வரும்போது நாட்டின் தலைவர் களவாக வெளிநாடு சென்றுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.ஏகாதிபத்திய நாடாக குறிப்பிடப்படும் பெலாராஸ் நாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரும்போது நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரை சந்திக்காது, சென்றமை தவறான விடயம் என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக் காட்டினார்.
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டிற்குச் சென்ற குழுவினர் கொள்ளையிடுவதற்காகச் சென்றிருந்தார்கள் எனின், பல மணிநேரங்களாக அவர்கள் அங்கு இருந்தமை என் என சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மந்தனா இஸ்மாயிலின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறவில்லை எனவும் இது ஊடகவியலாளர் மீதான தாக்குதலே இடம்பெற்றதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment