பௌத்தசாசன அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 11 ஆம் திகதி அமைச்சர்கள்
பௌஸி, தினேஸ் குணவர்த்தனா ஆகியோரின் இணைத்தலைமையில் கிரண்ட்பாஸ்
பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. அமைச்சர்
பௌஸி, இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புகளை சுட்டிக்காட்டி
பேசியுள்ளார்.
கிரண்ட்பாஸ் புதிய பள்ளிவாசலிலேயே முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகையில்
ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதற்கு அங்கிருந்த பௌத்த இனவாத
அமைச்சர்கள் (சம்பிக் ரணவக்க) பௌத்த தேரர்கள், சிங்கள பிரமுகர்கள் கடும்
எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன்போது புதிய பள்ளிவாசலை முற்றாக தகர்த்துவிட்டு, அருகாமையில்
விசாலமாக மற்றுமொரு பள்ளிவாசலை கட்டுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு பல தரப்புகளும் உடன்படவில்லை.
இவ்வாறு பல யோசனைகள், சிபார்சுகள் என இந்த பேச்சுவார்த்தை இழுபறியில்
சென்றுள்ளது. ஜனாதிபதிஜ மஹிந்த ராஜபக்ஸவும் இந்த பேச்சுவார்த்தையில்
இணக்கம் காணப்பட்டு, முடிவு எட்டப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தமையால்
எப்படியேனும் தீர்மானங்களை மேற்கொள்ள அவசரம் காட்டப்பட்டுள்ளது.
புதிய பள்ளிவாசலிலேயே தொழுகை நடைபெற வேண்டுமென முஸ்லிம்கள்
அடம்பிடிக்க, மறுபக்கம் ஒட்டுமொத்த பௌத்தசிங்களவர்களும் அதற்கு மறுப்புத்
தெரிவித்துள்ளனர். வேறு வழியின்றி முஸ்லிம்கள் அதற்கு உடன்பட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முஸ்லிம்கள் எவருக்கும் இதில் முழுமையான
சம்மதம் இருக்கவில்லை. சில முஸ்லிம் முஸ்லிம் அரசியல்வாதிகள்
ஆத்திரப்பட்டுள்ளனர். தமது முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர்கள்
உணர்ந்துள்ளனர். இப்பேச்சுவார்த்தை முஸ்லிம்களுக்கு பாதகமாக அமைந்தது
அல்லது முஸ்லிம்களின் விருப்பங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை
என்ற நிலையை அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள்
பலரின் கையடக்க தொலைபேசிகள் ஓப் செய்யப்பட்டிருந்தன.
மூத்த முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தகவல் தருகையில், கிரண்ட்பாஸ்
பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு தோல்விதான். பழைய பள்ளிவாசலுக்கு
அருகிலுள்ள அரச மரத்தை வெட்டி முடிப்பதற்கு இடையில் புதிய பள்ளிவாசலில்
தொழுவதற்காவது அனுமதியுங்கள் எனக் கெஞ்சிக் கேட்டபோது தமது ஆசை அடியோடு
நிராகரிக்கப்பட்டதாக அவர் கவலையுடன் தெரிவித்தார்…!
இந்தநிலையில் கிரண்ட்பாஸ் பழைய பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடவும்,
புதிய பள்ளிவாசலை அப்படியே கைவிடவும் பௌத்தசாசன அமைச்சில் நடைபெற்ற
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment