
ஒலுவில் துறைமுகத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்டஈடுகள் பெற்றுக்
கொடுப்பது தொடர்பிலும், திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்ச்ர் ரவுப் ஹக்கீம் தலைமையிலான
குழுவிற்கும், துறைமுகங்கள் . நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன
மற்றும் துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று
துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.இச்சந்திப்பில், இரு தரப்பினரும் குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். ஒலுவில் துறைமுகத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு குறித்து அமைச்சர் ஹக்கீம் இங்கு நீண்டதொரு விளக்கத்தினை வழங்கினார். அது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நஸ்டஈட்டினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அபேகுணவர்த்தண ஒலுவில் துறைமுகத்திற்கு வித்திட்டவர் அஸ்ரப் என்பதுடன் அதற்கு நிதியைப் பெற்றுக்கொடுத்தவர் அமைச்சர் ஹக்கீம் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பினை கட்டாயம் நாம் பெற்றுக்கொள்வோம் எனவும் குறிப்பிட்டு்ள்ளார்.
இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் உடபட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment